காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எஞ்சிய போட்டிகளில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு புகைப்படம் எடுத்து, தனது சிறந்த செல்ஃபி இதுதான் என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா அந்த தொடரில் பாதியில் விலகினார். அதன்பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் பாண்டியா ஆடவில்லை. 

காயம் குணமடையாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் முடிந்து டெஸ்ட் தொடர் நடந்துவரும் நிலையில், இதற்கிடையே பாண்டியா காயத்திலிருந்து மீண்டார். காயம் குணமடைந்தாலும் போட்டியில் ஆடுமளவிற்கு உடற்தகுதி பெற்றுள்ளாரா என்பதை சோதிக்கும் வண்ணம் ரஞ்சி போட்டியில் ஆட பணிக்கப்பட்டார். அதன்படி ரஞ்சி போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக ஆடியதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் வண்ணம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளர் பாண்டியா. 

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ஹர்திக் பாண்டியா, இந்திய அணி வீரர்களுடன் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மிகச்சிறந்த செல்ஃபி என்றும் பதிவிட்டுள்ளார்.