india won toss and chose to bowl

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்களே ஆடுகின்றனர்.

ஆனால், தென்னாப்பிரிக்க அணியில் ஏற்கனவே டிவில்லியர்ஸ் இல்லாத நிலையில், இன்றைய போட்டியில் கேப்டன் டுபிளெசிஸும் விளையாடவில்லை. காயம் காரணமாக டுபிளெசிஸ் விளையாடவில்லை. எனவே மார்க்ரம் கேப்டனாக செயல்படுகிறார்.

ஒருநாள் தொடரில் 1-0 என ஏற்கனவே இந்திய அணி முன்னிலை வகித்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியில், டிவில்லியர்ஸுடன் சேர்த்து டுபிளெசிஸும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, கேப்டன் டுபிளெசிஸ் தான் சதமடித்து மரியாதையான ஸ்கோரை அந்த அணி எட்ட உதவி செய்தார். இந்நிலையில், இந்த போட்டியில் அவர் விளையாடதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.