india won south africa in second one day match
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாசிம் ஆம்லா மற்றும் குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறினர்.

புவனேஷ்வரின் பந்தில் ஆம்லா அவுட்டானார். இதையடுத்து சாஹலின் பந்தில் டி காக்கும் அவுட்டானார். அதற்கு அடுத்த ஓவரில், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகிய இருவரும் ஒரே ஓவரில் வெளியேறினர்.
இதையடுத்து ஜோண்டோ, டுமினி, ரபாடா, மோர்கல், தாஹிர், மோரிஸ் ஆகிய அனைவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 32.2 ஓவர்களுக்கே வெறும் 118 ரன்கள் எடுத்து அந்த அணி ஆல் அவுட்டானது.

இதையடுத்து 119 என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. . சிக்ஸர், பவுண்டர்கள் என பறக்கவிட்ட ரோஹித், 15 ரன்களில் ரபாடா பந்தில் அவுட்டானார்.
அதன்பிறகு கோலியும் தவானும் ஜோடி சேர்ந்து, நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி, இலக்கை எளிதாக எட்டினர்.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
