India won by 93 runs for the second time

மேற்கிந்தியத் தீவுகள் – இந்தியா இடையேயான மூன்றாது ஒருநாள் தொடரில் 93 ஓட்டங்கள் பெற்று இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த நிலையில் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடைப்பெற்றது. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆட்டம் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீரன் பவெல், ஜோனதன் கார்டர், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் நீக்கப்பட்டு புதுமுக வீரர்கள் கைல் ஹோப், கேஸ்ரிக் வில்லியம்ஸ் மற்றும் ரோவ்மன் பவெல் சேர்க்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக டாஸ் ஜெயித்த மே.தீவுகள் கேப்டன் ஜாசன் ஹோல்டர் இந்த முறையும் பந்துவீச்சையே தேர்வு செய்தார்.

இதையடுத்து ரஹானேவும், ஷிகர் தவானும் இந்தியாவின் பேட்டிங்கை தொடங்கினர். தவான் இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 11 ஓட்டங்களீல் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து களம் புகுந்த யுவராஜ்சிங் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் தாக்குப்பிடித்து போராடிய ரஹானே 72 ஓட்டங்களில் வெளியேறினார்.

பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து இறுதி கட்டத்தில் அதிரடி காட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்கள் சேர்த்தது.

டோனி 78 ஒட்டங்களுடனும், கேதர் ஜாதவ் 40 ஒட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் மே.தீவுகளுக்கு 252 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் ஓட்டங்கள் குவிக்க தடுமாறினர். இந்திய அணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவேளியில் ஆட்டமிழந்தனர்.

ஜெசன் முகமது 40 ஓட்டங்களும், ரோவ்மன் பவல் 30 ஓட்டங்களும், ஷாய் ஹோப் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி 38.1 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய தரப்பில் அஸ்வின், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்களையும், பாண்டியா 2 விக்கெட்டையும் சாய்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐந்துப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. அடுத்தப் போட்டி நாளை நடைபெற உள்ளது.