India won 5 gold in boxing

ஆசிய விளையாட்டு தேர்வுப் போட்டி குத்துச்சண்டையில் இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றது.

ஆசிய விளையாட்டு தேர்வுப் போட்டி குத்துச்சண்டை போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் மணீஷ் கெளஷிக் 60 கிலோ எடைப் பிரிவு, ஷியாம் குமார் 49 கிலோ, ஷேக் சல்மான் அன்வர் 52 கிலோ, ஆஷிஷ் 64 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். மகளிர் பிரிவில் பவித்ரா 60 கிலோ பிரிவில் தங்கத்தை தட்டிச் சென்றார்.

அதேபோன்று,. 57 கிலோ பிரிவில் ஷஷி சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். முகமது எடாஷ் கான் 56 கிலோ, ரிது கிரெவால் 51 கிலோ, பவன் குமார் 69 கிலோ, ஆஷிஷ் குமார் 75 கிலோ ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று, முதல் ஆட்டத்தில் மகளிருக்கான இறுதிச் சுற்று ஒன்றில் பவித்ரா 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் நிலாவன் டெசாசெப்பை வீழ்த்தினார்.

ஆடவர் பிரிவில் ஷியாம் குமார் 4-1 என இந்தோனேஷியாவின் மரியோ பிளாசியஸை வீழ்த்தினார்.

சல்மான் அன்வர் 5-0 என ஃபிலிபினோ ரோஜன் லாடனையும், மணீஷ் கெளஷிக் - ஜப்பானின் ரென்டாரோ கிமுராவையும், ஆஷிஷ் - வங்கேதசத்தின் சுகர் ரேவையும் வீழ்த்தினர்.