இந்திய அணி 10 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது. 

இதையடுத்து 2-0 என தொடரையும் இந்திய அணி வென்றது. இது இந்திய மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக வெல்லும் 10வது டெஸ்ட் தொடர் ஆகும். இதன்மூலம் சொந்த மண்ணில் 10 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்று இந்திய அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

இந்திய அணிக்கு முன்னதாக இரண்டு முறை தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 1994/1995 முதல் 2000/2001 வரையிலான காலக்கட்டம் மற்றும் 2004/2005 முதல் 2008/2009 வரையிலான காலக்கட்டம் ஆகிய இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் வென்றுள்ளது. 

அதற்கு பிறகு இந்திய அணி தான் இந்த சம்பவத்தை செய்துள்ளது. 2012/2013 முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 தொடர்களை வென்றுள்ளது. இந்திய அணியின் வெற்றி பயணம் இன்னும் முடியவில்லை.