India Mary Kom won silver medal at International Boxing Tournament

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடைபெற்றது. இதில், மகளிருக்கான 48 கிலோ பிரிவில் போட்டியிட்டார் இந்தியாவின் மேரி கோம்.

அவர், இறுதிச்சுற்றில் பல்கேரியாவின் செவ்தா அசினோவாவிடம் வீழ்ந்தார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதேபோல மகளிருக்கான 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சீமா பூனியா, ரஷியாவின் அன்னா இவானோவாவிடம் தோற்று வெள்ளியுடன் வெளியேறினார்.

இதனையடுத்து இப்போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் வென்ற பதக்கத்தின் எண்ணிக்கை 6 ஆனது.

மற்ற வீராங்கனைகளான மீனா குமாரி தேவி (54 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), சவீதி பூரா (75 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றிருந்தனர்.