India Marie Kom in Asian Wrestling Boxing Tournament

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் இன்று தனது முதல் சுற்றில் களமிறங்குகிறார்.

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியத்நாமில் நடைபெறுகிறது. இதில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் இன்று தனது முதல் சுற்றில் களமிறங்குகிறார்.

தொடக்க சுற்றிலிருந்து அவருக்கு 'பை' வழங்கப்படாததை அடுத்து, மேரி கோம் தனது முதல் சுற்றில் வியத்நாமைச் சேர்ந்த தீம் தி டிரின் கியுவை எதிர்கொள்கிறார்.

மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சிக்ஷா தனது முதல் சுற்றில் மங்கோலியாவின் ஒயுன் எர்டென் நெர்குயை சந்திக்கிறார்.

நாளை நடைபெறவுள்ள முதல் சுற்றுகளில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சோனியா லேதர், ஜப்பானின் கானா குரோகியை எதிர்கொள்கிறார்.

அதேபோன்று 81 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி, சீனாவின் யாங் ஸியாவ்லியை எதிர்கொள்கிறார்.