ஐந்து டெஸ்டுகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா எப்போது மோதும் என்கிற தேதியை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

2014-ல் இந்திய அணி, இங்கிலாந்துடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதேபோல அடுத்த வருடமும் விளையாடவுள்ளது. 

2018-ல் இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுபயணம் செய்கிறது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 அன்று எட்பஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஆனால் சுற்றுப்பயணம் டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது.

ஜூலை 3 அன்று முதல் டி20 போட்டியுடன் இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம் தொடங்குகிறது. மூன்று டி20 போட்டிகள் முடிந்தபிறகு ஒருநாள் தொடர் ஜூலை 12 முதல் ஆரம்பமாகிறது.

இதன்பின்னர் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 11 அன்று 5-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்து இந்தியச் சுற்றுப் பயணமும் முடிவடைகிறது.

இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஜூலை 3 - முதல் டி20
ஜூலை 6 - இரண்டாவது டி20
ஜுலை 8 - மூன்றாவது டி20

ஒருநாள் தொடர்

ஜூலை 12 - முதல் ஒருநாள் போட்டி
ஜூலை 14 - இரண்டாவது ஒருநாள் போட்டி
ஜூலை 17 - மூன்றாவது ஒருநாள் போட்டி

டெஸ்ட் தொடர்

ஆகஸ்ட் 1 - முதல் டெஸ்ட்
ஆகஸ்ட் 9 - இரண்டாவது டெஸ்ட்
ஆகஸ்ட் 18 - மூன்றாவது டெஸ்ட்
ஆகஸ்ட் 30 – நான்காவது டெஸ்ட்
செப்டம்பர் 7 - ஐந்தாவது டெஸ்ட்