India has won 11 medals in international shootings.
ஜூனியர்களுக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் 11 பதக்கங்கள் வென்று இந்தியா அசத்தியுள்ளது.
ஜூனியர்களுக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி செக் குடியரஸில் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 459 துப்பாக்கி சுடுதல் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய வீரர் அன்மோல் ஜெயின் தனிநபர் 50மீ பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன், அணிகளுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கமும், அணிகளுக்கான 50மீ பிஸ்டல் பிரிவில் வெள்ளியும் வென்றார்.
மற்றொரு இந்தியரான அர்ஜூன் பபுதா, 10மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோல், 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் செளதரியும், 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனீஷும் வெண்கலம் வென்றனர்.
மற்றொரு இந்தியரான அர்ஜூன் பபுதா, 10மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோல், 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் செளதரியும், 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனீஷும் வெண்கலம் வென்றனர்.
இதனால், ஜூனியர்களுக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.