India defeated West Indies by 105 runs

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்கமாகத் தோற்கடித்து இந்தியா வெற்றிப் பெற்று அசத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

இந்த ஆட்டம் மழை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியதால் ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 43 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 103 ஓட்டங்களும், கேப்டன் விராட் கோலி 87 ஓட்டங்களும், ஷிகர் தவன் 63 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷாய் ஹோப் 81 ஓட்டங்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களை மட்டுமே சேர்த்தனர். இதனால் அந்த அணி 43 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவிடம் பங்கமாக தோற்றது.

இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரஹானே ஆட்டயநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது ஆட்டம் வரும் 30-ஆம் தேதி நார்த் சௌன்ட் நகரில் நடைபெற இருக்கிறது.