Asianet News TamilAsianet News Tamil

ஐசிசி டெஸ்ட் நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்...

India continue to top ICC Test rankings
India continue to top ICC Test rankings
Author
First Published May 2, 2018, 12:04 PM IST


ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.. 

தென் ஆப்பிரிக்கா, ஆஸி உள்ளிட்டவை முறையே 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் குழு (ஐசிசி) நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "கடந்த 2015 - 16, 2016 - 17-ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் விளையாடும் நாடுகள் பெற்ற வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் படுதோல்விக்கு பின் இந்திய டெஸ்ட் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. 

20161-17-இல் 13 டெஸ்ட்களில் இந்திய அணி 10-ல் வென்றது.  அதன்படி, தற்போது இந்தியா 125 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. 

அதனைத் தொடர்ந்து 112 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது, 

106 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

நியூஸிலாந்து 4-வது இடத்திலும், இங்கிலாந்து 5-வது இடத்திலும், இலங்கை 6-வது இடத்திலும், பாகிஸ்தான் 7-வது இடத்திலும், வங்கதேசம் 8-வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே 10-வது இடத்திலும் உள்ளன.
 
 

Follow Us:
Download App:
  • android
  • ios