india chose to bowl first in sixth odi

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய அணி 4-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

செஞ்சூரியனில் நடக்கும் ஆறாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

முதல் ஒருநாள் போட்டியை தவிர வேறு எந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களை முழுமையாக ஆடவில்லை. இந்த போட்டியிலாவது 50 ஓவரை முழுமையாக ஆடுமா? அல்லது வழக்கம்போல சாஹல் மற்றும் குல்தீப்பின் சுழலில் வீழுமா?