சண்டிகரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அணியின் நட்சத்திர வீரர் விராத் கோலியின் அபார சதம், கேப்டன் தோனியின் பொறுப்பான ஆட்டம் வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லதாம் 61 ரன்களும், நீஷம் 57 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணித் தரப்பில் உமேஷ் யாதவ், ஜாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 286 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகனே(5), ரகானே(13) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், 3-வது விக்கெட்டுக்கு விராத்கோலி-தோனி கூட்டணி நங்கூரமிட்டு ரன்களைச் சேர்த்தது. 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். தோனி 80 ரன்கள்(91பந்து 6பவுண்டரி, 3சிக்சர்) சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மணிஷ் பாண்டே, கோலியுடன் இணைந்தார். முத்தியாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி ஒருநாள் அரங்கில் தனது 26-வது சதத்தை நிறைவு செய்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கோலி 154(16பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களிலும், பாண்டே 28 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலையுடன் உள்ளது.
இந்த போட்டியில் கேப்டன் தோனி 26 ரன்கள் எட்டிய போது ஒருநாள் அரங்கில் 9 ஆயிரம் ரன்களை எட்டினார். சர்வதேச அளவில் இந்த சாதனையை எட்டிய 3-வது விக்கெட் கீப்பர் பேட்ஸ் மன் மற்றும் இந்திய அளவில் 5-வது பேட்ஸ்மன் எனும் பெருமையை பெற்றார். மேலும், ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்து சச்சினின் சாதானையையும் தோனி முறியடித்தார்.
சச்சின் சாதனையை முறியடித்த தோனி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.
Latest Videos
