ஆசிய கோப்பையில் இந்தியா - ஹாங்காங் இடையேயான போட்டியில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடரை விட்டு வெளியேறியது. ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில், இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி மாலை 5 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பவுலிங் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா, தவான், ராயுடு, தோனி போன்ற அதிரடி வீரர்களை கொண்ட இந்திய அணியை ஹாங்காங் போன்ற சிறிய அணி முதலில் பேட்டிங் ஆட பணிப்பது, தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொள்வது போன்ற செயல். அதைத்தான் ஹாங்காங் செய்துள்ளது.

தொடக்க வீரர்களாக ரோஹித்தும் தவானும் களமிறங்கி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.ஆனால் அது நிலைக்கவில்லை. 23 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, வழக்கம்போலவே தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார்.