மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 70 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் இந்தியாவை விட 93 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து இருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையே 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19), டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, 131.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 501 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஹோல்டன் 170, ஜார்ஜ் பார்ட்லெட் 179 ஓட்டங்கள் எடுத்து இருந்தனர்.

இந்திய தரப்பில் கனிஷ்க் சேத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து ஆடிய இந்திய அணியில் டேரில் ஃபெராரியோ அதிகபட்சமாக 117 ஓட்டங்கள் எடுத்தார்.

122 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 431 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இந்தியா.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, மூன்றாம் நாளான நேற்று ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஏற்கெனவே, முதல் இன்னிங்ஸில் 70 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து, தற்போது 93 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.