India - West Indies face today Will you win the first victory?

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஆட்டம் இன்று ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மொத்தம் ஐந்து ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை இரண்டு ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்தியாவும், முதல் வெற்றியைப் பெற வேண்டிய நிர்பந்தத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் களம் காணுகின்றன.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்த வரையில், அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன், விராட் கோலி ஆகியோர் வலுவூட்டுகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் அனுபவமிக்க தோனி, யுவராஜ் தங்களது பங்களிப்பை வழங்க உள்ளனர். ஹார்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களும் பேட்டிங்கில் பலம் காட்ட உள்ளனர்.

பந்துவீச்சைப் பொருத்த வரையில், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் வேகப்பந்து வீச தயாராக இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சால் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணிகள் விவரம்

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, ரிஷப் பந்த்.

மே.இ.தீவுகள் அணிகள் விவரம்:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷு, ரோஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் முகமது, ஆஷ்லே நர்ஸ், கிரன் பாவெல், ரோவ்மேன் பாவெல்.