India - the last day of the West Indies play today Victory? Equalization?

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தத் தொடரில் இதுவரை இந்தியா இரண்டு வெற்றிகளையும், மேற்கிந்தியத் தீவுகள் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.

இதில் இந்திய அணி தொடரை வெல்லும் நோக்த்திலும், மேற்கிந்தியத் தீவுகள் தொடரை சமன் செய்யும் நோக்கத்திலும் களம் காணும்.

இந்திய அணியைப் பொருத்த வரையில் முந்தைய ஆட்டத்தில் மோசமாக தோல்வி கண்டது.

இந்திய வீரர்கள் 189 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கும் அளவிற்கு மேற்கிந்தியத் தீவுகளை கட்டுப்படுத்தினாலும், அந்த ஓட்டத்தை கூட எட்ட முடியாமல் இந்திய அணியின் தோல்வி அமைந்தது.

எனவே, முந்தைய தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்புடன் இந்திய அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

டாப் ஆர்டரில் வழக்கம் போல ஷிகர் தவன்- அஜிங்க்ய ரஹானே ஜோடிம் மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, தினேஷ் கார்த்திக், தோனி உள்ளிட்டோர் உள்ளனர்.

அதேபோல், காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் பங்கேற்காத யுவராஜ், இந்த ஆட்டத்தில் திரும்பலாம். இவர்களுடன் கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொருத்த வரையில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொருத்த வரையில் முந்தைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. அதே வியூகத்துடன் அவர்கள் களம் கண்டு, வெற்றி பெற்று, தொடரை சமன் செய்யலாம்.