In the mens championship tilt the Haryana girls teams captured the Cup
தேசிய அளவிலான சப் - ஜூனியர் கபடி போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணியும், மகளிர் பிரிவில் ஹரியாணா அணியும் கோப்பையைக் கைப்பற்றின.
தேசிய அளவிலான 28-ஆவது சப் - ஜூனியர் கபடி போட்டி, கோவை, சின்னவேடம்பட்டியில் உள்ள சி.எம்.எஸ். கல்லூரி மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் ஆகியவை சார்பில் கோவையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கின.
இதில், ஆடவர் பிரிவில் 27 அணிகளும், மகளிர் பிரிவில் 27 அணிகளும் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஆடவர் பிரிவில் 'சாய்' அணியும், உத்திர பிரதேச அணியும் மோதின.
இதில், சாய் அணி 49 - 20 என்ற கணக்கில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தியதன்மூலம் கோப்பையை கைப்பற்றியது.
அதேபோன்று, மகளிர் பிரிவில் ஹரியாணா அணியும், சாய் அணியும் மோதின.
இதில், ஹரியான அனி 21 - 15 என்ற கணக்கில் 'சாய்' அணியை வீழ்த்தியதன்மூலம் கோப்பையைத் தட்டிச் சென்றது.
இந்தப் போட்டியில், தமிழக மகளிர் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
