நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விலகியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஸ்மித் விலகியுள்ளார்.

ஸ்மித்திற்கு பதிலாக இளம் வீரர் சாம் ஹேஸ்லெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டனான டேவிட் வார்னருக்கும் நியூஸிலாந்து தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் மேத்யூ வேட் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் திங்கள்கிழமை ஆக்லாந்தில் நடைபெற இருக்கிறது.