வரும் மே மாத இறுதியில் இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை நடக்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு(2020) ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்க உள்ளது. 

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான கால அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது. ஆண்கள் மற்றும் மகளிர் டி20 உலக கோப்பை தொடர்கள் இரண்டுமே ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 

அக்டோபர் 24ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடக்கிறது. அதற்கு முன்னதாக அக்டோபர் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. 

”ஏ” பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் “பி” பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் உள்ளன. 

அக்டோபர் 24ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கின்றன. நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், 15-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.

இந்திய அணி லீக் சுற்றில் வலுவான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொண்டு ஆட உள்ளது. இந்த மூன்று அணிகளுமே டி20 கிரிக்கெட்டில் சிறந்த அணிகள். எனவே லீக் போட்டிகள் இந்திய அணி சவாலானதாகவே இருக்கும். 

லீக் சுற்றில் இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கான கால அட்டவணை:

அக்டோபர் 24 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா

அக்டோபர் 29 - தகுதிச்சுற்றில் தேர்வாகி வரும் அணியுடன் மோதல்

நவம்பர் 1 - இந்தியா vs இங்கிலாந்து

நவம்பர் 5 -  தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணியுடன் மோதல்

நவம்பர் 8 - இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்