I will not examine peoples opinion My job is to help Indian team win - Indian veteran Murali Vijay ...

என்னுடைய பிரதான வேலை வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெற உதவுவதுதான். மக்களின் கருத்துகளை என்னால் ஆராயந்து கொண்டிருக்க முடியாது என்று இந்திய வீரர் முரளி விஜய் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய கிரிக்கெட் வீரரன முரளி விஜய் ஒரு வலது-கை மட்டையாளர். துவக்க ஆட்டக்காரர். இந்திய, தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.

33 வயதில் 51 டெஸ்டுகள் விளையாடியுள்ள விஜய், 17 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். 

இந்த நிலையில் முரளி விஜய் அளித்த பேட்டி ஒன்றில், “நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடத் தொடங்கியபோது என்னை 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர் என்று முத்திரை குத்தினார்கள்.

டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடியபோது நான் டெஸ்ட் வீரர் என்கிறார்கள். இதர வகை கிரிக்கெட்டுகளில் விளையாடமுடியாது என்றார்கள்.

மக்களின் கருத்துகளை என்னால் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. என்னுடைய பிரதான வேலை - வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெற உதவுவதுதான்.

50 ஓவர், டி20 கிரிக்கெட்டுகளில் எனக்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

என் முன்னே உள்ள தடைகளைத் தாண்டி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடவேண்டும்” என்று கூறினார்.