I will come back for the right situation then see David Warner

எனக்கான சரியான சூழ்நிலை மீண்டும் வரும். அப்போது நான் முன்போல ஒட்டங்களை குவிப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் டேவிட் வார்னர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வார்னர் இடம் பிடித்துள்ளார். இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு இன்னிங்ஸ்கள் என மொத்தம் சேர்த்து வெறும் 131 ஒட்டங்கள் மட்டுமே எடுத்து உள்ளார்.

நேற்றுச் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

“என்னைப் பொறுத்தவரை இதைவிடச் சிறப்பாக பேட்டிங் செய்ய இயலாது என்று கருதுகிறேன்.

எனது பேட்டிங் முறையில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சரியான தருணத்தில் ஓட்டங்கள் எனக்கு கிடைப்பதில்லை.

எனக்கான சரியான சூழ்நிலை மீண்டும் வரும். அப்போது நான் முன்போல ஒட்டங்களை குவிப்பேன். அதுவரை, நான் வழக்கம்போலவே போட்டிகளுக்கு என்னை தயார்படுத்திக் கொள்வேன்.

இத்தகைய கடுமையான சூழ்நிலைகளை நான் மட்டுமே சந்திக்கவில்லை. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டு உள்ளனர் என்று டேவிட் வார்னர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.