ஜம்மு - காஷ்மீர் நிலவரம் கவலை தருவதாக உள்ளது என்ற பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி எப்போதும் எனது நாட்டுக்கு தான் முன்னுரிமை தருவேன் என்று பதிலளித்துள்ளார்.

"இந்திய காஷ்மீர் பகுதியில் தற்போதைய நிலவரம் மிகவும் கவலை தருவதாக உள்ளது. அங்கு அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றன. காஷ்மீர் மக்களுக்கான சுய நிர்ணய உரிமை, சுதந்திரம் மறுக்கப்படுகிறது. 

ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எங்கே போனது, இந்த ரத்தக்களறியை தடுக்க அந்த அமைப்புகள் ஏன் முயற்சிக்கவில்லை?" என்று தனது கட்டுரைப் பக்கத்தில் ஷாகித் அப்ரிடி பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் இந்திய கேப்டன் கோலி, "நாட்டுக்கு எதிரான தெரிவிக்கப்படும் எந்த கருத்தையும் என்னால் ஏற்க முடியாது. ஆதரிக்கவும் முடியாது. அப்ரிடியின் கருத்தை முழுமையாக அறியாமல் எதையும் கூறமுடியாது. சிலர் சில பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எனினும் நாட்டுக்கே தான் எப்போதும் முன்னுரிமை தருவேன்" என்று அவர் கூறினார்.