I not shocked that Tommy was defeated me - Federer

ஸ்டட்கர்ட் ஓபனில் டாமி ஹேஸிடம் தோற்பேன் என்று எதிர்ப்பார்த்தேன் அதனால் எனக்கு அந்த தோல்வி அதிர்ச்சியாக இல்லை என ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.

ஸ்டட்கர்ட் ஓபன்ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னணி வீரரான ஃபெடரர், டாமி ஹேஸிடம் தோற்றார்.

தோல்வி குறித்துப் ஃபெடரர் பேசியது:

"இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதால் நான் அதிர்ச்சியடையவில்லை. டாமி ஹேஸிடம் தோற்க நேரிடலாம் என ஏற்கெனவே எனக்குத் தெரியும். இந்த வயதிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார். அவருடைய வயதில் யார் சிறப்பாக ஆடினாலும் நான் மகிழ்ச்சியடைவேன். அதிலும் டாமி ஹேஸ் சிறப்பாக ஆடியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியாகும்' என்றார்.

கடந்த 25 ஆண்டுகளில் உலகின் டாப்-5 வீரர்களில் ஒருவரை தோற்கடித்த மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள டாமி ஹேஸ் வெற்றி குறித்துப் பேசுகையில்,

"ரோஜர் ஃபெடரரைப் போன்ற நெருங்கிய நண்பர்களோடு புல்தரையில் விளையாடுவது எப்போதுமே சிறப்பானதாகும். அது மிகுந்த உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும். 2-ஆவது செட்டில் மேட்ச் பாயிண்ட்டை இழப்பதிலிருந்து தப்பிய பிறகு நெருக்கடியின்றி விளையாட ஆரம்பித்தேன். இந்த வெற்றி எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது' என்றார்.