i lost because i play badly Alexander
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மோசமாக ஆடினேன் முதல் சுற்றிலேயே தோற்றேன் என்று ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பேசினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்டார்.
இதில், 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
தோல்வி குறித்துப் அலெக்சாண்டர் பேசியது:
'மிக மோசமாக விளையாடியதால் தோற்றேன். இதுவும் கடந்து போகும். அதேநேரத்தில் இது வருத்தப்பட வேண்டிய அளவுக்கு சோகமான விஷயமல்ல.
ரோமில் நடைபெற்ற ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் சிறப்பாக ஆடினேன். அதனால் சாம்பியன் பட்டம் வென்றேன். இங்கு மோசமாக ஆடினேன். அதனால் முதல் சுற்றில் தோற்றிருக்கிறேன் அவ்வளவுதான்' என்றார்.
