இந்தியாவைப் பற்றியும், அதன் மல்யுத்த கலாசாரம் குறித்தும் அதிகம் கேள்விப்பட்டுள்ளேன் என்று ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற கனடா வீராங்கனை எரிகா வைப் தெரிவித்தார்.
இதுகுறித்து, எரிகா, “திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு என்போன்ற மல்யுத்த வீராங்கனை / வீரர்களுக்கு பிடபிள்யுஎல் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
டிசம்பரில் நடைபெறவுள்ள பிடபிள்யுஎல் 2-ஆவது சீசனில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ளேன்.
இந்தியாவைப் பற்றியும், அதன் மல்யுத்த கலாசாரம் குறித்தும் அதிகம் கேள்விப்பட்டுள்ளேன். உலகில் வேறெங்கும் நடைபெறாத வகையிலான இந்தப் போட்டியில் பங்கேற்க உலக சாம்பியன்களும், ஒலிம்பிக் வீரர்களும் ஆர்வம் கொள்வதில் ஆச்சரியமில்லை” என்று எரிகா கூறினார்.
இந்தப் போட்டியில் அவருடன் சகநாட்டு வீராங்கனையும், 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவருமான டோரத்தி ஈட்ஸ், ஒலிம்பிக் போட்டியில் மும்முறை பங்கேற்ற கனடா வீரர் ஹைஸ்லான் கார்சியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
