சமகாலத்தில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களாக திகழ்பவர்கள் இந்திய கேப்டன் கோலியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தும். இவர்களில் இருவரில் யார் சிறந்தவர் என ஒற்றை நபரை தேர்ந்தெடுக்க முடியாத அளவிற்கு இருவரும் சிறந்து விளங்குகின்றனர்.

கோலியும் ஸ்மித்தும் ரன் மெஷின்களாக திகழ்கின்றனர். டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியும் ரன்களை குவித்து வருகின்றனர். கேப்டன்களாகவும் இருவரும் சிறந்து விளங்குகின்றனர்.

இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், கோலியிடமிருந்து பேட்டிங் கற்றுக்கொண்டதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்மித், ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். யார் யாரிடமிருந்து எதை கற்றுக்கொள்ள முடியுமோ அவற்றை நான் கற்றுக்கொள்கிறேன். சுழற்பந்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதில் சில நுணுக்கங்களை கோலியிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

அதேபோல, டிவில்லியர்ஸ், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆகியோரிடமிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் சிறந்த அணிகளுள் ஒன்றாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான ஸ்மித், தனக்கு போட்டியாக திகழும் வீரர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக பெருந்தன்மையுடன் கூறியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.