HS Pranai and Kashyap to progress to next round in New Zealand Open

நியூஸிலாந்து ஓபன் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ் பிரணாய் மற்றும் காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

நியூஸிலாந்து ஓபன் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ் பிரணாய் தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் ஷேஸார் ஹிரென் ருஸ்தாவிடோவுடன் மோதினார்.

இதில், 21-14, 21-16 என்ற செட் கணக்கில் ஷேஸார் ஹிரென் ருஸ்தாவிடோவுடன் வீழ்த்தினார் எச்.எஸ்.பிரணாய்.

எச்.எஸ்.பிரணாய் அடுத்த சுற்றில் இந்தோனேஷியாவின் ஃபிர்மான் அப்துல் கோலிக்கை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் காஷ்யப் தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் டியோனைசியஸ் ஹையோம் ரும்பாகாவை எதிர்கொண்டார்.

இதில் 21-5, 21-10 என்ற செட் கணக்கில் டியோனைசியஸ் ஹையோம் ரும்பாகாவை வீழ்த்தினார் காஷ்யப்.

காஷ்யப் அடுத்த சுற்றில் நியூஸிலாந்தின் ஆஸ்கார் குவோவை எதிர்கொள்கிறார்.