Hong Kong Open Super Series India PV Sindhu advanced to semi-finals
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-12, 21-19 என்ற செட் கணக்கில் யம்மாகுசியை வீழ்த்தி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதுவரை யமாகுசியை ஆறு முறை சந்தித்துள்ள சிந்து, அவருக்கு எதிராக 4-வது வெற்றியை பதிவுச் செய்துள்ளார் என்பது கொசுறு தகவல்.
சிந்து தனது அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானனை சந்திக்கிறார்.
