Hong Kong Open Super Series climax sindhu won silver in the final match
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடித் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதிச்சுற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான தைவானின் டாய் ஸூ யிங்கை எதிர்கொண்டார் இந்தியாவின் பி.வி.சிந்து.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே டாய் ஸூ யிங் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். கடுமையாக போராடி அவ்வப்போது ஒரு சில புள்ளிகளை கைப்பற்றி வந்தார் சிந்து.
ஒருக் கட்டத்தில் 18-18 என்ற கணக்கில் இருவரும் சமநிலை இருந்தாலூம் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் டாய் ஸூ கைப்பறினார்.
இரண்டாவது செட்டில் டாய் ஸூவின் பல கடினமான ஷாட்களை சிந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த செட்டையும் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தார் டாய் ஸூயிங்.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 18-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வி கண்டார் சிந்து.
டாய் ஸூவை 11-வது முறையாக எதிர்கொண்ட சிந்து, அவரிடம் 8-வது முறையாக வீழ்ந்துள்ளார்.
இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிந்து, அதில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
