Herschel and Kashyap in the previous round of the quarter
சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஹர்ஷீல் டேனி, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான மூன்றாவது சுற்றிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி சீனாவின் ஜங்ஜெள நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் ஹர்ஷீல் டேனி, சீனாவின் யான் ரூன்ஸுடன் மோதினார். இவர், 21-16, 22-20 என்ற நேர் செட்களில் ரூன்ஸை வீழ்த்தினார்.
அடுத்ததாக ஹர்ஷீல், சீனாவின் சன் பெக்ஸியாங்குடன் மோதுகிறார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் காஷ்யப் தனது இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் சுப்பான்யூவுடன் மோதினார். இதில், காஷ்யப் 21-16, 21-17 என்ற நேர் செட்களில் சுப்பான்யூவை வீழ்த்தினார்.
அடுத்ததாக காஷ்யப், சீனாவின் கியாவ் பின்னுடம் மோதுகிறார்.
