Here are the teams that have won the All India Hockey Tournament ...
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய வலைகோள் பந்தாட்டப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் பெங்களூரு, ஒடிஸா, செகந்திராபாத் அணிகள் வெற்றிப் பெற்றன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய வலைகோள் பந்தாட்டப் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் நான்காவது நாளான நேற்றுக் காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், பெங்களூரு இராணுவ லெவன் அணி 7-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிர காவல் அணியை வீழ்த்தியது
மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், ஒடிஸா கிழக்கு கடற்கரை இரயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி பெங்களூரு அணியை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில், செகந்திராபாத் தெற்கு மத்திய இரயில்வே அணி 6-2 என்ற கோல் கணக்கில் புதுதில்லி சென்ட்ரல் செக்ரட்டரியேட் அணியை தோற்கடித்தது.
