he need not prove himself to the other famous actress says about former captain
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றிக்கோப்பையை கைப்பற்றி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த அணியின் கேப்டன் தல தோனியை இந்த வெற்றிக்காக அனைவருமே பாராட்டி இருக்கின்றனர். இவரை ஏலத்தில் எடுக்காததை நினைத்து இப்போது வருத்தப்படுவதாக, பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ’ப்ரீதி சிந்தா’ தற்போது தெரிவித்திருக்கிறார்.

பிரபல நடிகையான ப்ரீதி சிந்தா தோனி குறித்து பேசும் போது, நான் தோனியின் ரசிகை இல்லை. ஆனால் ஓவ்வொரு முறையும் அவரது ஆட்டத்தை ஒரு கிரிக்கெட் ரசிகையாக விரும்பி பார்த்திருக்கிறேன்.
அவரது வயது குறித்து விமர்சித்து அவரால் நன்றாக விளையாட முடியாது என கூறியவர்களுக்கு எல்லாம், அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவரது திறமையே அதற்கெல்லாம் பதில் சொல்லும். அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை ஆடுகளத்தில் எப்போதும் நிரூபித்து காட்டுகிறார். ஐபிஎல் அணியில் இருக்கும் கேப்டன்களிலேயே மிகவும் சிறந்தவர் என்று தோனியை கூறலாம். என கூறி தோனியை புகழ்ந்திருக்கிறார் ப்ரீதி சிந்தா
