Asianet News TamilAsianet News Tamil

எங்க ஆளுங்கல தவிர வேற எல்லா டீம் பேட்ஸ்மேனும் அந்த விஷயத்துல சுத்த வேஸ்ட்!! தெறிக்கவிட்ட பாஜி

குறிப்பாக குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, எதிரணிகளின் சொந்த மண்ணில் அந்த அணிகளின் பேட்டிங் ஆர்டரை சரித்து கெத்து காட்டிவருகிறது. அஷ்வின் - ஜடேஜா சிறந்த ஸ்பின் ஜோடியின் இடத்தை பூர்த்தி செய்துள்ள ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் ஜோடி அபாரமாக பந்துவீசிவருகின்றனர். 
 

harbhajan singh reveals why opposition batsmen lost wickets to kuldeep and chahal
Author
India, First Published Feb 7, 2019, 12:11 PM IST

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணி வலுவான அணியாக திகழ்கிறது. மூன்று விதமான போட்டிகளிலும் அந்நிய மண்ணிலும் எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது இந்திய அணி. அண்மைக்காலமாக இந்திய அணி வெற்றிகளை குவித்துவருவதில் பவுலர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 

பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ராவும் ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் - சாஹல் ஜோடியும் மிரட்டலாக பந்துவீசிவருகிறது. 

harbhajan singh reveals why opposition batsmen lost wickets to kuldeep and chahal

அதிலும் குறிப்பாக குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, எதிரணிகளின் சொந்த மண்ணில் அந்த அணிகளின் பேட்டிங் ஆர்டரை சரித்து கெத்து காட்டிவருகிறது. அஷ்வின் - ஜடேஜா சிறந்த ஸ்பின் ஜோடியின் இடத்தை பூர்த்தி செய்துள்ள ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் ஜோடி அபாரமாக பந்துவீசிவருகின்றனர். 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தனர். ரிஸ்ட் ஸ்பின்னர்களான இவர்களின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாததே இவர்களின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. 

harbhajan singh reveals why opposition batsmen lost wickets to kuldeep and chahal

நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் இடையே கூட, இதே கருத்தை முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்திருந்தார். குல்தீப்  மற்றும் சாஹலின் பவுலிங் ஆக்‌ஷனை கணிக்க முடியாத வரை எதிரணியால் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்று தெரிவித்திருந்தார். 

harbhajan singh reveals why opposition batsmen lost wickets to kuldeep and chahal

இந்நிலையில், குல்தீப் மற்றும் சாஹல் குறித்து பேசியுள்ள முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங், குல்தீப்பும் சாஹலும் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். சீராக விக்கெட்டுகளை வீழ்த்திவருகின்றனர். 40க்கும் அதிகமான போட்டிகளில் அவர்கள் ஆடியுள்ளனர். அந்த போட்டிகளில் அவர்கள் பந்துவீசிய பிட்ச் மேப்பை பார்த்தோமேயானால், மிக துல்லியமாக வீசியுள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்களை போல எதிரணி பேட்ஸ்மேன்களால் ஸ்பின் பவுலர்களின் கையசைவுகளை கணிக்க முடியவில்லை. அதனால்தான் எதிரணி பேட்ஸ்மேன்கள் குல்தீப் மற்றும் சாஹலின் பவுலிங்கில் வீழ்கின்றனர் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios