Asianet News TamilAsianet News Tamil

மொக்க பசங்கதான்.. ஆனாலும் கவனமா ஆடணும்!! எச்சரிக்கும் ஹர்பஜன்

ஆஸ்திரேலிய தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Harbhajan singh believes india has a chance to win australia series
Author
Delhi, First Published Nov 4, 2018, 1:44 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

இந்திய மண்ணில் அசத்தலாக ஆடும் இந்திய அணி, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. அதனால் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்று, தாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சிறப்பாக ஆடும் அணி தான் என்பதை நிரூபிக்க வேண்டும். Harbhajan singh believes india has a chance to win australia series

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, சொந்த மண்ணில் சீன் போடும் அணி அல்ல என்பதை ஆஸ்திரேலியாவில் நிரூபித்தாக வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. Harbhajan singh believes india has a chance to win australia series

ஆஸ்திரேலிய அணி ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என பெரும் வேகப்பந்து வீச்சு படையே உள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சையும் பவுன்சரையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கும் ரோஹித் உள்ளார். கோலி, ரஹானே, புஜாரா, ராகுல் இவர்களோடு இளம் திறமை பிரித்வி ஷா என பேட்டிங்கிலும் இந்திய அணி வலுவாகவே உள்ளது.

  Harbhajan singh believes india has a chance to win australia series

நம் அணி வலுவாக இருக்கும் அதே நிலையில், ஆஸ்திரேலிய அணி நலிவடைந்துள்ளது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய நட்சத்திர வீரர்களை இழந்து தவிக்கிறது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியில் அவர்கள் இருவரும் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பலம். அதனால் இந்திய அணிதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  Harbhajan singh believes india has a chance to win australia series

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அது எளிதான காரியம் அல்ல. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தொடரை வெல்லலாம். இல்லையெனில் கஷ்டம் தான் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios