harbajan sing twitter abour hydrabad team

11 வீரர்களை வச்சு எங்களை சாச்சிரலாம்னு பாத்தீங்களா ? வர்தா புயலையே பாத்தவங்க நாங்க என்று ஹைதராபாத் அணிக்கு ஹர்பஜன் சிங் செல்லமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில், ஐதராபாத் அணியிடம் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் செமைமயாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஓங்கி இடிஇடித்து,ஓயாமல் மின்னல் வெட்டி,பல மணிநேரம் நிக்காமல் நெரம்பபபெய்த,வரதா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய இயலவில்லை.பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா.இது தலை நிமிர்ந்து நடை போடும் என அவர் கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் இந்த டுவிட்டர் பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிககளிடையே வைரலாக பரவி வருகிறது.