Hamilton topped the 2017 Formula-1 fifth round
2017 பார்முலா–1 கார் பந்தயப் போட்டியின் ஐந்தாவது சுற்றில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
2017 பார்முலா–1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. பந்தய தூரம் 307.104 கிலோ மீட்டர் கொண்ட இதன் ஐந்தாவது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடைப்பெற்றது.
வழக்கம் போல் பத்து அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறினர்.
விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் மெர்சிடஸ் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 35 நிமிடம் 56.497 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.
பெராரீ அணியைச் சேர்ந்த ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 3.490 வினாடி பின்தங்கி 2–வது இடம் பெற்றார்.
ரெட்புல் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சார்டே 3–வது இடம் பிடித்தார்.
மெக்சிகோவைச் சேர்ந்த இந்தியா அணிக்காக கார் ஓட்டும் செர்ஜியோ பெரேஸ் 4-வது இடத்தையும், பிரான்ஸ் அணியின் ஈஸ்ட்பான் ஒகான் 5-வது இடத்தையும் பெற்றனர்.
ஐந்தாவது சுற்று முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 104 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 98 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 63 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர்.
ஆறாவது சுற்றுப் போட்டி மொனாக்கோவில் வருகிற 25–ஆம் தேதி நடக்கிறது.
