ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் முதன்மையான ரஞ்சி கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. மும்பை அணி முதல் இன்னிங்ஸ் 228 ஓட்டங்களுக்கு இழந்தது.
அடுத்து முதல் இன்னிங்ûஸ விளையாடிய குஜராத் அணி 328 ஓட்டங்கள். இதில் கேப்டன் பார்த்தீவ் படேல் அதிகபட்சமாக 90 ஓட்டங்கள் எடுத்தார்.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 411 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
312 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் குஜராத் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
முக்கியமாக அந்த அணியின் கேப்டன் பார்த்தீவ் படேல் சிறப்பாக விளையாடி 143 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
89.5 ஓவர்களில் 313 ஓட்டங்கள் எடுத்து குஜராத் அணி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையைக் கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக கேப்டன் பார்த்தீவ் படேல் அறிவிக்கப்பட்டார்.
