Gold won by Delhi player who participated in National walking race

தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் டெல்லி வீராங்கனை செளம்யா பேபி தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் டெல்லி வீரங்கனையான சௌம்யா பேபி பந்தய இலக்கான 20 கி.மீட்டரை ஒரு மணி 31 நிமிடம் 28.72 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தேசிய சாதனை படைத்தார்.

இதற்குமுன் குஷ்பிர் ஒரு மணி 31 நிமிடம் 40 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

இந்த நிலையில், இந்தாண்டு போட்டியில் இந்திய தடகள சம்மேளனம் சார்பில் கலந்து கொண்ட குஷ்பிர், ஒரு மணி 32 நிமிடம் 16.96 விநாடிகளில் வந்து வெள்ளி வென்றார்.

அரியாணா வீராங்கனை கரம்ஜித் கெளர் 1 மணி 34 நிமிடம் 8.60 விநாடிகளில் வந்து வெண்கலம் வென்றார்.

அதேபோன்று ஆடவருக்கான 20 கி.மீட்டர் பிரிவில் தேசிய சாதனையாளரான கேரளத்தின் இர்ஃபான் 1 மணி 21 நிமிடம் 31.25 விநாடிகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

உத்தரகண்டின் மணீஷ் சிங் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியும், அரியாணாவின் நீரஜ் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.