Marathi Vultures vs Tamil Lions GIPKL 2025 Final : குருகிராமில் நடைபெற்று வரும் குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி லீக்கில் (GI-PKL) ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு மராத்தி வால்கர்ஸ் மற்றும் தமிழ் லயன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன.
Marathi Vultures vs Tamil Lions GIPKL 2025 Final : குருகிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி லீக்கின் (GI-PKL) ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு மராத்தி வால்கர்ஸ் மற்றும் தமிழ் லயன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. முதல் அரையிறுதியில் மராத்தி வால்கர்ஸ் அணி பஞ்சாபி டைகர்ஸ் அணியை 38-36 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதே போன்று 2ஆவது அரையிறுதியில் தமிழ் லயன்ஸ் அணி பீகார் லெப்பர்ட்ஸ் அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது.
14 வயதில் சதம்! பேட்டிங், கடின பயிற்சி குறித்து மனம் திறந்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி!
இதைத் தொடர்ந்து நாளை ஏப்ரல் 30 அன்று நடைபெறும் குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி லீக் (GI-PKL) இறுதிப் போட்டியில் மராத்தி வால்கர்ஸ் அணியும் தமிழ் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. திங்கட்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில், பஞ்சாபி டைகர்ஸ் அணியை 38-36 என்ற கணக்கில் வீழ்த்தி மராத்தி வால்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாக இருந்தன, ஆனால் முக்கியமான தருணங்களில் வால்கர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது.
14 வயதில் சதம் அடித்து வரலாறு படைத்த பாலகன்! யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
பஞ்சாபி டைகர்ஸ் அணி 4 சூப்பர் டேக்கிள்களை எடுத்த போதிலும், மராத்தி வால்கர்ஸ் அணி அழுத்தத்தின் கீழ் அமைதியாக விளையாடி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், தமிழ் லயன்ஸ் அணி பீகார் லெப்பர்ட்ஸ் அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது. லயன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 25 ரெய்டு புள்ளிகள், 18 டேக்கிள் புள்ளிகள் மற்றும் பல ஆல்-அவுட்களை எடுத்து, லெப்பர்ட்ஸ் அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தது. லெப்பர்ட்ஸ் அணி மூன்று சூப்பர் டேக்கிள்களை எடுத்த போதிலும், தமிழக லயன்ஸ் அணியின் அபார ஆட்டத்தால் அவர்கள் தோல்வியைத் தழுவினர்.
இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி – 14 வயதில் 11 சிக்ஸருடன் 101 ரன்கள்!
பெண்கள் பிரிவில், தமிழ் லயனஸ், பஞ்சாபி டைகிரஸ், தெலுங்கு சீட்டாஸ் மற்றும் பீகார் லெப்பர்டஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பெண்கள் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழ் லயனஸ் அணியும், போஜ்புரி லெப்பர்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாபி டைகிரஸ் அணியும், தெலுங்கு சீட்டாஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் நாளை 30 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. DD Sports மற்றும் Waves OTT-யில் நேரலையாக கபாடி போட்டிகளைக் காணலாம். Sony Sports 3 மற்றும் FanCode-லும் மாலை 7:00 மணி முதல் நேரலையாகப் போட்டிகளைக் காணலாம்.
