Gayatri single player won the championship in two categories

ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியாவின் காயத்ரி வாகைச் சூடி அசத்தியுள்ளார். இவர் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி வாகைச் சூடி அசத்தியுள்ளார்.

15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் காயத்ரி, சக நாட்டவரான சமியா பரூக்கியை எதிர்கொண்டார்.

இதில், காய்த்ரி 21-11, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் சமியா பரூக்கியை வீழ்த்தினார்.

அதேபோன்று, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் காயத்ரி - சமியா பரூக்கி இணை, இந்தோனேசியாவின் கெல்லி லாரிஸா - ஷெலான்ட்ரி வியோலா இணையுடன் மோதியது.

இதில், இந்திய இணை 21-17, 21-15 என்ற நேர் செட்களில் இந்தோனேசியா இணையைத் தோற்கடித்தது.

காயத்ரி, சமியா ஆகிய இருவரும் கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கோபிசந்தின் மகள் இரண்டு பிரிவுகளில் வாகைச் சூடி அசத்தியுள்ளார்.