ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி எப்படி தயாராக வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி எப்படி தயாராக வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்திய மண்ணில் வெற்றிகளை குவித்தாலும் வெளிநாடுகள் தோல்விகளை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்தது.
எனவே அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அந்த டெஸ்ட் தொடரை வென்று வெளிநாடுகளிலும் சிறப்பாக ஆடும் அணி என்பதை நிரூபிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லாததும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்கும் நிலையில் புவனேஷ், பும்ரா, இஷாந்த் போன்ற சிறந்த வேகப்பந்து யூனிட்டுடன் இந்திய அணி செல்வதும் இந்தியாவிற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

எனவே ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி தான் வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்ய தேவையில்லை. அப்படி செய்தால் அது அணியின் ரிதத்தை கெடுத்துவிடும். எனவே பலவீனமாக இருக்கும் விஷயங்களை மட்டும் கண்டறிந்து அதை சரிசெய்து கொண்டாலே போதும். பலவீனமாக இருக்கும் விஷயங்களை நேர்மையாக ஏற்றுக்கொண்டு அதை சரி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
