Asianet News TamilAsianet News Tamil

கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்லாம சின்னப்புள்ளத்தனமா பேசுறாரே..? சாஸ்திரியை கழுவி ஊத்தும் கங்குலி

தற்போதைய இந்திய அணி தான் கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார். 
 

ganguly criticize team indias head coach ravi shastri
Author
England, First Published Sep 7, 2018, 3:15 PM IST

தற்போதைய இந்திய அணி தான் கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்தது. கடைசி போட்டி இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது. 

டெஸ்ட் தொடரை இழந்ததன் எதிரொலியாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மூன்றாவது போட்டியில் வென்றபிறகு, தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்கும் தகுதிவாய்ந்த பெஸ்ட் டிராவலிங் அணி என சாஸ்திரி தெரிவித்திருந்தார். நான்காவது போட்டியில் தோற்றபிறகு, பெஸ்ட் டிராவலிங் டீம் என வாயில் மட்டுமே பேசாமல் செயலில் காட்ட வேண்டும் என சாஸ்திரிக்கு சேவாக் பதிலடி கொடுத்திருந்தார். 

ganguly criticize team indias head coach ravi shastri

ரவி சாஸ்திரி மீது சேவாக், கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடக்கூடிய அணியாக தற்போதைய இந்திய அணி தான் திகழ்கிறது என மீண்டும் தெரிவித்தார்.

ரவி சாஸ்திரியின் இந்த கருத்தை கேட்டு கடுப்பான கவாஸ்கர், கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியின் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றிகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார். 

ganguly criticize team indias head coach ravi shastri

இந்நிலையில், ரவி சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கங்குலி, சாஸ்திரி மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். அதுபோன்ற கருத்துகளை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டால், அது மெச்சூரிட்டில் இல்லாத செயல்தான். அனைவருமே இந்தியாவிற்காக ஆடுகிறார்கள். எனவே வீரர்கள் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios