Asianet News TamilAsianet News Tamil

இந்த ஒரு திறமை போதும்.. ஆஸ்திரேலியாவை அந்த பையன் துவம்சம் பண்ணிடுவான்!! தாதா அதிரடி

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் பிரித்வி ஷா சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலும் பிரித்வி ரன்களை குவிப்பார் என்று நம்புவதற்கான காரணத்தையும் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
ganguly believes prithvi shaw will play well in australia
Author
India, First Published Oct 7, 2018, 11:01 AM IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் பிரித்வி ஷா சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலும் பிரித்வி ரன்களை குவிப்பார் என்று நம்புவதற்கான காரணத்தையும் கங்குலி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். 134 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. களமிறங்கியது முதலே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். குறிப்பாக பேக்ஃபூட் ஷாட்களை அபாரமாக ஆடினார். 

ganguly believes prithvi shaw will play well in australia

டெஸ்ட் கிரிக்கெட்டின் வழக்கமான பேட்டிங்கை ஆடாமல், ஒருநாள் போட்டி போல ஆடினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிறோம்; அதனால் நன்றாக ஆட வேண்டும் என்ற அச்சமோ பதற்றமோ இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார் பிரித்வி. இவரது ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் மெச்சினர். கிரிக்கெட் ரசிகர்களும் இவரது ஆட்டத்தை கொண்டாடினர். இவரது பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஒத்திருப்பதால், இந்திய அணியின் அடுத்த சச்சின் என அழைக்கப்படுகிறார். மேலும் இவரது ஆட்டத்தை பார்த்த ரெய்னா, பிரித்வி ஷா சேவாக்கை நினைவுபடுத்துவதாக தெரிவித்தார். 

ganguly believes prithvi shaw will play well in australia

பிரித்வி ஷாவை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகியோரின் கலவை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழ்ந்தார். பிரித்வி ஷா, இளம் வயது சச்சின் மற்றும் கவாஸ்கரை நினைவுபடுத்துவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் குர்ட்னி வால்ஷ் புகழ்ந்திருந்தார். 

ganguly believes prithvi shaw will play well in australia

இந்நிலையில், கங்குலியும் பிரித்வி ஷாவை பாராட்டியுள்ளார். பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள கங்குலி, பிரித்வியை உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் ஆட வைக்க வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து நாடுகளிலும் ரன்களை குவிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் பிரித்வி ஷா. பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடினார் பிரித்வி. 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பையில் ஆடுவது மாதிரி அல்ல; டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது முற்றிலும் வித்தியாசமானது. பிரித்வியின் பேட்டிங் நன்றாக இருந்தது. இந்திய அணிக்காக நீண்ட காலம் அவர் ஆட வேண்டும். பேக்ஃபூட் ஷாட்களை சிறப்பாக ஆடுவதால் ஆஸ்திரேலியாவிலும் பிரித்வி நன்றாக ஆடி ரன்களை குவிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios