ganguly believe in indian captain kohli

வரும் 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றுவிட்டால் ஆக்ஸ்போர்டு வீதிகளில் கோலி சட்டையே போடாமல் சுற்றலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கான தயாரிப்பை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. 2019 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான சரியான 11 வீரர்களை தேர்வு செய்யும் பணி தற்போதிலிருந்தே நடைபெற்றுத்தான் வருகிறது. 

அந்த உலககோப்பையை கருத்தில்கொண்டு, தற்போது வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்படுகின்றனர். சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும். வீரர்களின் உடற்தகுதியை சோதிக்க யோ யோ தேர்வுமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அனைத்து வகையிலும் 2019 உலகக்கோப்பையை கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறார் கோலி. அவருக்கு பிசிசிஐயும் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. வீரர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை கூட பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

அடுத்த உலகக்கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும் கேப்டன் கோலியும் உள்ளனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கங்குலி, நாங்கள் விளையாடும் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றால், லட்சுமண் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவர் என்ற தனி தைரியம் இருக்கும். கோலியை பார்க்கும்போது அப்படியான உணர்வுதான் ஏற்படுகிறது. 

2019ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை கோலி வென்றுவிட்டால், ஆக்ஸ்போர்டு வீதிகளில் கோலி சட்டையில்லாமல் கூட உலவலாம் என கங்குலி தெரிவித்தார்.