Game Over Am going to take the next treatment Gale manhpils
இண்டியன்வெல்ஸ் போட்டி முடிந்த நிலையில், இடது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறப்போவதாக தெரிவித்தார் கேல் மான்ஃபில்ஸ்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, உலகின் 11-ஆம் நிலை வீரரான கேல் மான்ஃபில்ஸ் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து அவர், “இண்டியன்வெல்ஸ் போட்டியின்போதே இடது காலில் காயம் ஏற்பட்டது. இருந்தும், கடுமையாக போராடினேன். போட்டி முடிந்த நிலையில், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன். அதில், இடது முழங்கால் மூட்டுப் பகுதியில் குருத்தெலும்பிலும், இடது குதிகால் சதைப்பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இனிமேல் காயத்துக்கான சிகிச்சை மேற்கொள்ளப் போகிறேன். காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்து போட்டிகளுக்கு திரும்புவேன்” என்று அவர் தெரிவித்தார்.
