Asianet News TamilAsianet News Tamil

ஸ்மித் தடைக்கு இதுதான் காரணமா? அதிர வைக்கும் பின்னணி

gambhir opinion about smith ban
gambhir opinion about smith ban
Author
First Published Mar 30, 2018, 3:40 PM IST

ஸ்மித்தை பார்த்தால் ஏமாற்றுக்காரராக தெரியவில்லை என தெரிவித்துள்ள இந்திய வீரர் காம்பீர், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனைக்கான காரணத்தை வேறு கோணத்தில் அணுகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் அந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, ஓராண்டு தடையும் விதித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகபட்சமானது என்று கருத்து கூறும் சில வீரர்கள், அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வீரர் கௌதம் காம்பீர் டுவீட் செய்துள்ளார். அதில், ஊழல் இல்லாத சூழலே கிரிக்கெட்டுக்குத் தேவை. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் மிகவும் கடுமையானவை. ஊதிய உயர்வுக்காகக் குரல் எழுப்பியதற்கான தண்டனையை ஸ்மித்தும் வார்னரும் அனுபவிக்கிறார்களா? வீரர்களின் நலனுக்காகக் குரல் எழுப்பியவர்களை நிர்வாகிகள் கேவலப்படுத்திய வரலாறுகள் உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் இயன் சாப்பல்.

While cricket needs to be corruption-free but feel sanctions on Aussies bit harsh. Are @stevesmith49 & @davidwarner31 paying for revolt for pay hike? History has it administrators deride those who standup for players’ cause. Classic case: Ian Chappell #BallTampering #StevenSmith
— Gautam Gambhir (@GautamGambhir) March 29, 2018

ஸ்மித்தின் தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விடவும் ஏமாற்றுக்காரர் என்கிற முத்திரையுடன் வாழ்வது பெரிய தண்டனை.

Feel sorry for @stevesmith49 dad (in pic) other family members. Hope media n Aussie public go easy on them as families can be soft targets. More than d ban living wid this feeling of being called a cheat is a bigger punishment. #BallTamperingRow pic.twitter.com/L2sV8BgWAH
— Gautam Gambhir (@GautamGambhir) March 29, 2018

ஸ்மித் ஓர் ஏமாற்றுக்காரராக எனக்குத் தெரியவில்லை. தன்னுடைய நாட்டின் வெற்றிக்காக அவர் கடினமாக முயன்றுள்ளார். அதற்கான வழிமுறைகள் கேள்விக்குரியவை. அதற்காக அவரை ஊழல்வாதி என முத்திரை குத்த வேண்டாம் என காம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

I may be getting emotional but @stevesmith49 doesn’t look to me a cheat. Don’t know about u but I see in him a desperate leader trying to win a Test match for his country, his team. Yes, indeed, his methods were questionable but let’s not label him corrupt #BallTamperingScandal pic.twitter.com/xOxAM45QXM
— Gautam Gambhir (@GautamGambhir) March 29, 2018

Follow Us:
Download App:
• android
• ios