அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கவுதம் காம்பீர், வழக்கம்போலவே அதிரடியாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் தைரியமான நேர்மையான மற்றும் மனதில் பட்டதை வெளிப்படையாக பட்டென பேசக்கூடியவர் கவுதம் காம்பீர். மிகச்சிறந்த வீரரான காம்பீர், சர்ச்சைகளின் காரணமாகவே அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

எப்போதுமே நேர்மையின் பக்கமே நிற்கும் காம்பீர், தவறு என தெரிந்தால் அதற்கு உடன்பட மாட்டார். சற்றும் யோசிக்காமல் அதை எதிர்ப்பார். இந்திய அணிக்காக ஆடியபோதும் பின்னர் ஓரங்கட்டப்பட்ட பிறகும் கூட அப்படித்தான் இருந்தார் காம்பீர். இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக ஆடாத காம்பீர், அண்மையில் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக ஆடிய ரஞ்சி போட்டியில் சதமடித்து, சதத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தார்.

இளம் வீரர்களுக்காக குரல் கொடுப்பது, தேர்வு முறையில் நடக்கும் முறைகேடுகள், கிரிக்கெட் அமைப்பில் நடக்கும் முறைகேடுகள் என அனைத்திற்கு எதிராகவும் வலுவான குரலை பதிவு செய்பவர் காம்பீர்.

இளம் வீரர்களுக்காக குரல் கொடுப்பது, தேர்வு முறையில் நடக்கும் முறைகேடுகள், கிரிக்கெட் அமைப்பில் நடக்கும் முறைகேடுகள் என அனைத்திற்கு எதிராகவும் வலுவான குரலை பதிவு செய்பவர் காம்பீர்.

ஓய்விற்கு பிறகு அளித்த பேட்டியில் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசிய காம்பீர், தான் நேர்மையாக செயல்பட்டதன் விளைவுகள் குறித்து பேசினார். அப்போது, இவையெல்லாம் என்னை பாதித்தன. ஆனால் அநீதி இழைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நம் அமைப்பில் நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்கள் முட்டாள்தனமாக உள்ளது. நான் அவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தேன். அதன் விளைவாக நிறைவேறாத ஒரு கிரிக்கெட் வாழ்க்கையாக எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. உலக கோப்பையை வென்ற அணியில் ஆடியது எனக்கு பெருமையானது. இன்னும் இந்திய அணிக்காக ஆடுவதற்கு என்னிடம் திறமைகள் உள்ளன. ஆனால் சில பல விஷயங்கள் சாதகமாக இல்லை என மறைமுகமாக தெரிவித்தார்.