இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இந்துாரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 557, நியூசிலாந்து 299 ரன்கள் எடுத்தன.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது.

முரளி விஜய் (11), புஜாரா (1) ஆட்டமிழக்கமால் இருந்தனர்.

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது. முரளி விஜய் (19) 'ரன்-ஆட்டமிழந்தார்.'

முந்தைய நாளில் 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறிய காம்பிர் மீண்டும் களமிறங்கினார்.

சிறப்பாக செயல்பட்ட காம்பிர் (50) அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

தன் பங்கிற்கு புஜாராவும் அரை சதத்தை பதிவு செய்தார்.

உணவு இடைவேளையின்போது, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து, 385 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது.

புஜாரா (5௦), கோஹ்லி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.